SIVA SAKTHI CHIT FUND

+91 95975 22616

sivashakthichit@gmail.com

பாதுகாப்பான சிட்டி

சிவ சக்தி குழுமம், கோவையில் உள்ள மிகச் சிறந்த சிட்பண்ட் நிறுவனங்களில் ஒன்று, வாடிக்கையாளர் சேவையில் நீண்ட காலமாக உள்ள நிறுவனம். இந்நிறுவனம், மே 8, 2017 தொடங்கப்பட்டது, தன்னுடைய கடும் முயற்சியாலும் தன்னலமற்ற சேவையினாலும், அளவிலும் தரத்திலும் வளர்ந்து வருகிறது. சிவசக்தி சிட்பண்ட் குழுமம், திரு. விஜயகுமார் அவர்களால் தொடங்கப்பட்டது.

சிறந்த சேவைகள்

ஆரம்பம் முதலே அவர் தன்னுடைய அர்ப்பணிப்பாலும் விடா முயற்சியாலும் கடும் உழைப்பினாலும் முன்னேறியவர். சிவசக்தி சிட்பண்ட்ஸ் நிறுவனம், பதிலளிப்பதிலும் வாடிக்கையாளர் சேவையிலும் இந்தியாவிலேயே சிறந்த நிறுவனமாகும். தனது வாடிக்கையாளர்களின் தொழில் வளர்ச்சிக்கு இந்நிறுவனத்தின் மூலமாக உதவி செய்து வருகிறார்.

எங்கள் மதிப்பு

கோவையின் நம்பகமான சிட்பண்ட்ஸ் நிறுவனம், சிவசக்தி சிட்பண்ட்ஸ் என்று அடையாளம் கண்டு கொள்ளப் படுகிறது என்பதில் பெருமிதம் கொள்கிறோம். நாங்கள் எங்களுடைய வாடிக்கையாளர் சேவையை தொடர்வோம். நம்பிக்கை என்பதே எங்கள் நிறுவனத்தினுடைய பொன்மொழி. அவசர தேவை ஏற்படும் போது பணம் பெறுவதற்கும் சேமிப்பாகவும் சிட்பண்ட் உள்ளது.

சிவசக்தி சிட்பண்ட்ஸ்

அவசர தேவை ஏற்படும் போது பணம் பெறுவதற்கும் சேமிப்பாகவும் சிட்பண்ட் உள்ளது. கோவையின் சிறந்த சிட்பண்ட் நிறுவனம் என்ற பெயரும் எங்களுக்கு உண்டு. சிட்பண்ட் என்பது பரஸ்பரம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப் பட்டுள்ளது. சந்தா தாரர்கள் ஒரு குழுவாக இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி, சேர்ந்த தொகையை ஒவ்வொரு உறுப்பினருக்கும் கொடுப்பது ஆகும்.

சிவசக்தி சிட்பண்ட்ஸ் நிறுவனம் சந்தாதாரர்களுக்கு ஒரு நம்பகமான பாலமாக இருந்து சந்தா தொகையை ஒவ்வொரு உறுப்பினருடமும் வசூல் செய்கிறது. மொத்த சந்தா தொகையில் கம்பெனியுடைய கமிஷன் போக மீதி உள்ள தொகை ஏல தொகையாக கருதப்படும். சிவசக்தி சிட்பண்ட்ஸ் நிறுவனம், 15 மாதத்தில் இருந்து 60 மாதங்கள் வரை தவணை வழங்குகிறது. ஒவ்வொரு சந்தாதாரரும் சீட் காலத்தில் மட்டும் தான் பணம் பெற முடியும்.

சிட்பண்ட்ஸ் சட்டம் 1982, சீட் என்பதை கீழ் கண்டவாறு விளக்குகிறது, சீட் என்பது பணப் பரிவர்த்தனை, சீட் என்றோ சிட்பண்ட் என்றோ அழைக்கப்படும். ஒரு நபர் குறிப்பிட்ட நபர்களுடன் ஒப்பந்தம் செய்வது, ஒரு குறிப்பிட்ட தொகையை தவணையாக செலுத்தி ஏல தொகையை ஒப்பந்தத்தில் கூறியபடி பெறுவது ஆகும்.

திட்டம் - ஒன்றில் பயன்பாடு

சீட்டுத் தொகை
  • 30000
  • 60000
  • 90000
  • 150000
  • 300000
  • 100000
  • 200000

திட்டம் - இரண்டின் பயன்பாடு

சீட்டுத் தொகை
  • 120000
  • 150000
  • 180000
  • 210000
  • 240000
  • 270000
  • 300000

திட்டம் - மூன்றின் பயன்பாடு

சீட்டுத் தொகை
  • 150000
  • 210000
  • 300000

  • உங்கள் வருமானத்திற்கேற்ப சந்தா செலுத்தும் முறை.
  • நடுத்தர மக்களுக்கு ஏற்ப 30 மாததவணை தொகை திட்டம்.
  • சீட்டில் இணைவதற்கு எளிய முறை.
  • அதிகபட்ச தள்ளுபடி 40% லிமிட் நடைமுறைப் படுத்தப்படும்.

முக்கிய கேள்விகள் :


என்னென்ன வழிகளில் பணம் செலுத்தலாம்?

வாடிக்கையாளர்கள் தங்களது சந்தா தொகையை பணமாகவோ, ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாகவோ செக் ஆகவோ DD மூலமாகவோ செலுத்தலாம்.செக் ஆக இருந்தால் ஏலம் எடுப்பதற்கு முன்னாள் சரி பார்க்கப் படும்.

நான் எப்போது ஏலத்தில் கலந்து கொள்ளலாம்?

உறுப்பினர் முதல் மாதத்தில் இருந்தே ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஆனால் நடப்பு தேதி வரை பணம் செலுத்தி இருக்க வேண்டும். நடப்பு தேதி வரை பணம் செலுத்தாதவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள முடியாது.

ஏலத்தின் நோக்கம் என்ன?

ஒவ்வொரு குழுவிலும் சில நபர்களுக்கு பணம் தேவைப்படலாம். அதனால் பணம் தேவைப்படுபர்கள் அனைவரும் ஏலத்தில் கலந்து கொள்வார்கள். ஏலத் தேதியின் போது யார் அதிக தொகைக்கு ஏலம் கேட்கிறாரோ அவர் தொகையை எடுத்தவராக அறிவிக்கப்படுவார்.

சீட்டினால் ஏற்படக்கூடிய சேமிப்பு பயன்கள் என்ன?

மாதா மாதம் கட்டாய சேமிப்பு நடப்பதால் ஈவுத்தொகை கிடைக்கும். கடைசி மாதத்தில் எடுத்தால் கூட ஈவுத்தொகை வங்கியின் வட்டியை விட அதிகமாக கிடைக்கும்.

சேமிப்பு அல்லது கடனினால் வருமான வரியில் ஏற்படக்கூடிய பலன்கள் என்ன?

ஈவுத்தொகைக்கு வரி கட்ட வேண்டியது இல்லை. ஏலத்தொகை நஷ்டம் என்று காட்ட வேண்டுமென்றால் ஈவுத்தொகையை மதிப்பீட்டில் வருமானமாக காட்ட வேண்டும். அதனால் சீட்டினால் பெறப்பட்ட தொகைக்கு வரி செலுத்த வேண்டியது இல்லை.

ஏலத்தில் எடுத்த பிறகு எவ்வளவு காலத்தில் பணம் கிடைக்கும்?

ஆவணங்கள் சரிபார்ப்பு முடிந்த பிறகு ஆவணங்கள் நிறைவானதாக இருந்தால் பணம் வாடிக்கையாளருக்கு செலுத்தப்படும்.

ஆவணங்கள் சரிபார்ப்பு முடிந்த பிறகு ஆவணங்கள் நிறைவானதாக இருந்தால் பணம் வாடிக்கையாளருக்கு செலுத்தப்படும்.

சீட் என்பது மட்டும் தான் சிறந்த பொருளாதார தயாரிப்பாகும். சந்தாதாரர்கள் கடைசி மாதம் வரை செலுத்தும் தொகை வங்கியின் தொடர் வைப்பு தொகையில் பெரும் வட்டியை விட அதிகமாகும்.


இது எப்படி வேலை செய்கிறது,


சீட் என்பது தேவை உடைய நபர்களை சந்தாதரர்களாக குழுப்படுத்துவதாகும். இதுவே சீட் நடத்துவதின் அடிப்படை தேவையாகும். ஃபோர்மேன் என்பது நிறுவனமாகும். நிறுவனம் சந்தாதாரர்களை ஒன்று சேர்த்து சீட் நடத்தும். நிறுவனம் சந்தாதாரர்களின் பணம் வசூலிக்கவும் ஏலத்தை நடத்துவதற்கும் சந்தாதாரர்களின் ஆவணங்களை வைத்து கொள்ளவும் உண்டானதாகும். இதற்கு 5% கமிஷன் ஆக எடுத்துக் கொள்ளப்படும். இதை தவிர நிறுவனத்திற்கு எந்தவித சிறப்பு சலுகைகளும் இல்லை.

ஏலம் குறிப்பிட்ட தேதியில் தொடங்கும் சந்தாதாரர்கள் அனைவரும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே குறைந்த பட்ச தொகைக்கு ஏலம் கேட்டால் குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்படும்


விதிமுறைகள் :


  • வசிப்பிடத்துடன் கூடிய அடையாள அட்டை சமர்ப்பிக்க வேண்டும்
  • வாடிக்கையாளர்கள் தங்களுது சந்தா தொகையை தினசரியோ வாராந்திரமாகவோ மாதாந்திரமாகவோ செலுத்தலாம்
  • வாடிக்கையாளர்களுக்கு மூன்றாவது தவணை செலுத்திய பிறகு இன்சூரன்ஸ் செய்து தரப்படும்